செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சியில் குடியரசு தின கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ சிவன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பற்றாளர் துணைத் தலைவர் சியாமளாதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அபாயகரமான தொழிலில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத ஊராட்சியாக மாற்றுவது, கலைஞர் கனவு இல்லத்திட்டப் பயனாளிகள் தேர்வு, தொழுநோய் இல்லாத ஊராட்சியாக நடவடிக்கை, திறந்த வெளி கழிவறை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது, தேசிய ஊரக பணி தொடர்பாக அறிக்கை தயாரிப்பது,ஆச்சாரி சமூகத்துக்கான சுடுகாடு செல்லும் பாதை சீரமைக்க, ஆதிதிராவிடர் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, 100 வீடுகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் உடனடியாக நிதி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தல்,ஐயர் சுடுகாடு வண்டி பாட்டை என்ற இடத்தில் குடியிருப்பு அருகில் உள்ளதால் அதை அதே ஊராட்சி ருத்ரபூமி என்ற இடத்திற்கு மாற்றி அமைக்கவும்உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஊராட்சி செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், மகளிர் குழுவினர்,மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மைக்காவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்