சென்னை ஆவடி வான் புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் தாமரை மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் விழா சங்கத்தின் நிறுவனத் தலைவர் பால. இரகுபதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளையும் கவிஞர்களுக்கு விருதுகளையும் உலக திருக்குறள் தூதர் விஜி சந்தோஷம் வழங்கி பேருரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் இயக்குனர் கோ. வெற்றிவேந்தன்,நாவுக்கரசி உலகநாயகி பழனி, ஆசிரியர் மணி, டி ஆர் ஆர் செங்குட்டுவன், சங்க நிர்வாகிகள் ராம சிவசங்கர் சென்னை செந்தில், எஸ் முரளி,அகநம்பி பாலசுப்பிரமணியன்,சுவாமிநாதன் மற்றும் கவுன்சிலர்கள் அபிஷேக்,கார்த்திக் கே ஆர் எஸ் சண்முகம்,குமார் தஞ்சை புருஷோத்தமன்,ஆபத் சகாயம், நூர்ஜகான், ஆனந்தன் எம் மோகன் சத்யஜித், ரமேஷ் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
கவிஞர் இனியன் பாலாஜி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இறுதியில்
சூரியகலா நன்றி உரையாற்றினார்.