செய்தி ஜீவா செந்தில்.
கடலூர் மாவட்டம்,
வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை உலகிற்கு காட்ட வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையையும்,பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார்,வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும், தைப்பூசவிழா இந்த ஆண்டு 155, ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜனவரி 24ந்தேதி முதல் ஜனவரி 26ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலும், தருமச்சாலையில் ஜனவரி 27 முதல் 30 ந்தேதி வரை,அருட்பா முற்றோதலும் நடைபெற்றது.
கொடியேற்றம் நேற்று ஜனவரி 31ந்தேதி சனிக்கிழமை காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும்,7.30 மணிக்கு ,வள்ளலார் பிறந்த மருதூர்,தண்ணீரால்விளக்குஎரித்த
‘கருங்குழியிலும்.வள்ளலார்சித்திபெற்றமேட்டுக்குப்பத்தி லும்,தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து,ஞானசபையில் கொடி ஏற்றம்
காலை10மணிக்கு,பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது , மதியம் 1 மணி அளவில்திருவருட்பா இன்னிசை நடைபெற்றது.
இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது தைப்பூச விழாவில் சிகர நிகழ்ச்சியான, ஜோதி தரிசனம்; இன்று பிப்ரவரி,1ந் தேதி ஞாயிற்றுக்கிழமை,தைப்பூசதிருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமைகாலை,6மணி,10மணி,பகல்1மணி,இரவு7மணி,10மணி,மறுநாள் திங்கள்காலை5.30ஆக 6காலம்,7திரைநீக்கிய ஜோதிதரிசனம்,நடைபெறுகிறது.
இதனை கானதமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள்
லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம்
இதற்காக தமிழகத்தின்பல பகுதியில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள்இயக்கப்படும் தைப்பூசத்தன்றுகாலை 10 மணிக்குதருமச்சாலை
மேடையில் சிறப்பு நிகழ்வுகள்,மாவட்டகலெக்டர் சிபி ஆதித்யாசெந்தில்குமார் முன்னிலையிலும்,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர்
எம் ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில்நடைபெறுகிறதுஇதில்அறநிலையத்துறை
அமைச்சர், பி.கே.சேகர்பாபு,தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.சி.வெ.கணேசன், மற்றும்எம்பி,எம்எல்ஏக்கள்,மாவட்ட அரசு உயர்நிலை, அதிகாரிகள்உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்,தைப்பூச விழாவிற்கு பின்னர்
ஒருநாள் இடைவெளிவிட்டு பிப்ரவரி3ந்தேதி செவ்வாய்க்கிழமை
பகல்12மணிமுதல்மாலை 6 மணிவரைமேட்டுக்குப்பத்தில் உள்ள,வள்ளலார்சித்திப்
பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன் படுத்தியபொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்றதிருஅறைஉள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி.நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறு
கிறது. விழாகடைகள்: தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்படுகின்றன கடைகளில் அலுமினிய பாத்திரங்கள் பித்தளை பாத்திரங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் பழக்கடைகள் அவல் பொரி கடை அவல் பொறி கடை டெல்லி அப்பளம் கடைகள்
சர்க்கஸ் கூடாரங்கள் நடன நாட்டிய அரசியல் அரங்குகள் சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்
தெருக்கள், அமைக்கப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம், அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தம்,செயல்அலுவலர் ராஜாசரவணக்குமார், அறங்காவலர்கள் மற்றும் பார்வதிபுரம்கிராம மக்கள்
செய்து,வருகிறார்கள்.