பெரம்பலூர்.ஜன.31. பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆய்குடி மற்றும் 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுள்பாளையம், பெரம்பலூர் நகர் பகுதி, குரும்பலூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் SIR 2026 தொடர்பாக நடைப்பெற்று வரும் பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் எம்.லட்சுமி, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
ந.மிருணாளினி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2026 – ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடக் கூடாது என்பதன் அடிப்படையிலும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் வகையிலும், பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 02 சட்டமன்ற தொகுதிகளிலும் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் தொடங்கி நடைபெற்றது.
இந்நேர்வில்,
இந்திய தேர்தல் ஆணையத்தால், சிறப்பு தீவிர திருத்தம் SIR 2026 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக 147 – பெரம்பலூர், 148 – குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான பெறப்பட்ட படிவங்களின் உண்மை தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் , மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளில் களத்திலேயே விசாரணை செய்து மேலாய்வு (Super Check) பணி மேற்கொண்டார்கள்.
அதன்படி, இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கான ஏற்புரை மற்றும் மறுப்புரை பெறுதல் முடிவுறும் நிலையில் உள்ளதால் சிறப்பு முகாம்களிலும் அதற்கு பிறகும்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக-12,866 விண்ணப்பங்களும், நீக்கம் செய்தலுக்காக-3,808 விண்ணப்பங்களும் திருத்தங்கள் செய்தலுக்காக -10,320 விண்ணப்பங்களும், என மொத்தம் 26,994 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம் SIR 2026 தொடர்பாக நடைப்பெற்று வரும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட படிவங்களை உடனடியாக பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் துணை தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பெரம்பலூர் தொகுதி வாக்குபதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அனிதா, குன்னம் தொகுதி வாக்குபதிவு அலுவலர் / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், உதவி வாக்காளர்வட்டாட்சியர்கள் / உதவி வாக்கு பதிவு அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (பெரம்பலூர்), சின்னதுரை (குன்னம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.