சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 150 பெண்களுக்கு தையல் மிஷின்களை வழங்கினார்..
தொடர்ந்து அவர் பேசும்போது, முன்னரெல்லாம் வாக்களிப்பதற்கு ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.. பெண்களுக்கும் போராடி வாங்கி தந்தது திமுக. பெண்கள் ஏன் படிக்க வேண்டும் என்று ஆண்களை மட்டும் தான் முன்னர் படிக்க வைத்தார்கள். அதனை மாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம் தான், தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக முன்னேறி வருகிறது. தூத்துக்குடியில் 10 வகுப்பு படிக்கும் அனைத்து பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்..
அனைத்து பெண்களும் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பள்ளி படிப்பு மட்டுமின்றி கல்லூரியும் படிப்போம் என்று பெண்கள் விரும்புகின்றனர். தொழில் தொடங்க வேண்டும், தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று திமுக ஆட்சியில் பயிற்சி அளித்து வருகிறோம்.
பெண்களுக்கு தொழில் தொடங்க 25% மானியம் கொடுக்கப்படுகிறது. அதிக பெண் தொழிலதிபர்கள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, பணப்புழக்கம் உள்ளது. இந்த நிலையை மாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
கடந்த அதிமுக ஆட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் இருந்தது.. ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து வசதிகளும் உள்ளது. ரேஷன் கடையில் தரமான அரிசி தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சிலர் தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்க வருவார்கள். புதிதாக கட்சியை ஆரம்பித்து ஒரு மாயயை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இருக்கிறது என்றார்..