சுரண்டை சுரண்டையில் தென்காசி மாவட்ட ஒய்வு பெற்ற காவல்துறை நலச்சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வண்டி முத்து தலைமை வகித்தார்
செயலாளர் ராஜேந்திரன் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார் பொருளாளர் தம்பித்துரை வரவேற்றார்
சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற ஏடிஎஸ்பிக்கள் வள்ளல் காத்தான் மற்றும் புலியூர் உடையான். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
சட்ட ஆலோசகர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தளவாய் சுந்தரம் தொகுத்து வழங்கினார்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ஓய்வூதியர்களுக்கு அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு நன்றி தெரிவித்தும்
கமிட்டேசன் பணப்பயனை 15ஆண்டில் இருந்து 11 ஆண்டாக குறைக்க வேண்டும்
பணியின் போது மரணமடைந்த காவல்துறையினர் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பை உடனுக்குடன் வழங்க வேண்டும் இன்சூரன்ஸ் திட்டத்தை அரசே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன