எண்ணூர்
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி புதியதாக ஏற்பாட்டில் கட்டப்படவுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூமி பூஜை
போடப்பட்டு பணி துவக்கம்
பூஜை போட்டு முடித்த பிறகு ஊர் நிர்வாகிகளுக்கு அழைப்பு தரவில்லை என வாக்குவாதம் போலீசார் சமரசம்
எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதியில் ரூபாய். 2 கோடியே 50 லட்சங்கள் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் எம்எல்ஏ மற்றும் ஏமாற்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோ பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணி துவக்கப்பட்டது
அந்தப் பகுதியில் மீனவர்கள் அதிகம் வசிக்கின்ற நிலையில் கத்திவாக்கம் சென்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாழங்குப்பம் நெட்டுக்குப்பம் முகத்துவார குப்பம் காமராஜ நகர் சத்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சி எஸ் ஆர் நிதியில் இருந்து ரூபாய் 2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் கூடிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது
பூஜை நடைபெற்ற இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் சென்ற பிறகு ஊர் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு தரவில்லை என ஒருத்தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து எண்ணூர் காவல் ஆய்வாளர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்