நெல்லையில் ஜூன் 3-ல்…

கலைஞர் தமிழ்-100 கருத்தரங்கம் கவியரங்கம்.

கட்டுரை,படைப்புகளை அனுப்பலாம்.

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக வரும் ஜூன் மாதம் 3-அன்று நெல்லையில் நடைபெற இருக்கும் கலைஞர் தமிழ்-100 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக கட்டுரை,கவிதைகளை அனுப்பலாம் .

இது தொடர்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும்,நிகழ்ச்சி அமைப்பாளருமான கவிஞர் பேரா விடுத்திருக்கும் அறிக்கையாவது…

“மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது தமிழ்ப் படைப்புகளை மையப்படுத்தி “கலைஞர் தமிழ்-100” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தை பொதிகைத் தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடத்த உள்ளது. நிகழ்ச்சியில் படைப்புகள் அடங்கிய ஆய்வுக் கோவை வெளியிடப்பட உள்ளது.

இதற்காக கலைஞரின் ஆட்சித் தமிழ்,கலைஞரின் இலக்கியத் தமிழ்,கலைஞரின் நிர்வாகத் தமிழ்,கலைஞரின் இதழியல் தமிழ்,கலைஞரின் மேடைத் தமிழ்,கலைஞரின் திரைத் தமிழ்,கலைஞரின் அரசியல் தமிழ் ஆகிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும்,கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் படைப்புகளை அனுப்பலாம்.

கட்டுரைகள் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கவிதைகள் “கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் 24-வரிகளில் இருக்க வேண்டும்.

கட்டுரைகளுக்கு கட்டணமாக பேராசிரியர்களுக்கு ரூபாய் 700,ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ரூபாய் 500- செலுத்திட வேண்டும்.

கவிதைகளுக்கு கட்டணம் ரூபாய் 300-ஆகும்.

கட்டணங்களை மின்னஞ்சலில் செலுத்த கூகுள் பே எண் 8903926173 ஆகும். படைப்புகளை
kalaignartamizh100@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஏப்ரல் 30-க்குள் அனுப்பிட வேண்டும். படைப்புகளை சுருக்கவோ,நிராகரிக்கவோ அமைப்பாளருக்கு உரிமை உண்டு.

கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பிலான இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்க கவியரங்க நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும்,கருத்தரங்க அமைப்பாளருமான கவிஞர் பேரா என்ற பே.இராஜேந்திரன் செய்து வருகிறார்.”

இவ்வாறு கவிஞர் பேரா கூறி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *