புதுவை கலிதீர்த்தல் குப்பம் பெருந்தலைவர் காமராசர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சு. கனகவேல் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக புதுமை பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டத் தன்னார்வலர்களும்
கல்லூரிப் பேராசிரியர்களும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர். பெருமாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
