செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் 24ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் திருவிழாவின்முக்கிய விழாவான திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் புடவைகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில்
ஸ்ரீ செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், திருக்கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்கள்
தேரை இழுத்துச் சென்றனர்.
மேலும் தாங்கள் விளைநிலங்களில் விளைவித்த விவசாய பொருட்களை சாமிக்கு காணிக்கையாக செலுத்தினர்.
பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்ற பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்,
