விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999 -ம் ஆண்டு உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். 1999 -ம் ஆண்டு முதல்வராக இருந்தால் கருணாநிதி நினைவில் உதித்தது தான் உழவர் சந்தை திட்டம். 1999 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி நேரு பிறந்தநாளன்று முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன. மற்ற இடங்களை விட உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் நுகர்வோர் மத்தியிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. அப்போது சிறு, குறு விவசாயிகளுக்கு உழவர் சந்தைகள் நிலையான வருவாய் கொடுக்கிறது. கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பதை தடுக்க சந்தையின் 4 இடங்களில் உழவர் சந்தை நிர்ணயித்த விலைப்பட்டியல் பலகை வைக்கப்படுகின்றன.

உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கபடுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைத்தெரு பகுதியில் பேரூராட்சி அலுவலகம் எதிரே உழவர் சந்தை கடந்த திமுக ஆட்சியில் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதனை அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் உழவர் சந்தை மூடப்பட்ட நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் கூட உழவர் சந்தை திறப்பிற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி உழவர் சந்தையினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *