மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கண்டித்து 29.05.2023 மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை , கள்ளசாரயத்தினால் ஏற்படக்கூடிய உயிர்பலி , திமுக அரசின்   ஊழல் இவற்றை கண்டித்து வருகிற 29.05.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக ஆதாரவாளர்களை, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்களை, சரியானவர்களை முறையாக குறிப்பிட்ட தேதியில் சேர்த்து முடிக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையினை அதிமுகவினர் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

உடன் அதிமுக கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன்,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் உள்ளிட்ட நன்னிலம் , குடவாசல் , திருவாரூர் , திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை  ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள்  , மாவட்ட இளைஞர் , இளம் பெண் பாசறை நிர்வாகிகள்  பலர்  கலந்து கொண்டனர் . 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *