தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் வீராணம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, அரசு பள்ளியில் கலையரங்கம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன் நிதியில் அமைக்கப்பட்ட நெற்களம் மற்றும் சிமெண்ட் சாலை திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆலங்குளம் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் வீராணம் சேக் முகம்மது தலைமை தாங்கினார்.வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் கலை அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டி, சிமெண்ட் சாலை மற்றும் நெற்களத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் பேசியதாவது தமிழக முதல்வர் தென்காசிக்கு வந்த போது சுமார் 1020 கோடி மதிப்பிலான திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெறாத கிராமங்களே இல்லை எனலாம். அதனால் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வரை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்ச்சாகமாக வரவேற்றனர்.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நீதிச் சுமையை சீரமைத்து பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் மாவட்டத்திற்கு தேவையான மருத்துவமனைகள், புதிய நீர் வழித்தடங்கள் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் விரைவில் வழங்குவார் என பேசினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பழனி என்ற பால் துறை, கிருஷ்ணம்மாள் வெங்கடேஷ், தலைமைக் கழக பேச்சாளர் மரியராஜ்,கோபால், சந்திரன், அமானுல்லா,முன்னாள் விஏஓ பாலசுப்ரமணியன், இருதாலாய மருததப்பாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர் கணேசன்,ஜமாத் தலைவர் மிய்யாகண்ணு,துனதலைவர் முகமது உசேன்,கனி அறங்காவலர் குழு தலைவர் குமார், முன்னாள் கிளை கழகச் செயலாளர்கள் ஜலாலுதீன், ஹமீது, அப்துல் வகாப்,முகமது முஸ்தபா, நசீர்,முத்தலிபு மற்றும் ஏராளமான திமுக,காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.