தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் அமைந்துள்ள முருகன் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பூத் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான சி. மகேந்திரன் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளர், அமைப்பு செயலாளர் வி. மருதராஜ், மாவட்ட (BLO) பொறுப்பாளர்கள் ரியாஷ்கான் மற்றும் கோவை மனோஜ் ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டு வழிகாட்டல் வழங்கினர்.
பூத் கமிட்டி கூட்டத்தை அவைத்தலைவர் பி. கே. ராஜ் தொடங்கி வைத்தார். நகரச் செயலாளர் சி. ஆர். ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார்.
மாவட்டச் செயலாளர் சி. மகேந்திரன் தனது உரையில்,
“இந்த (BLO) ஆலோசனை கூட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் ஒன்றிய நகர பேரூர் கழக மற்றும் வார்டு கழக பொறுப்பாளர்களுடன் நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதும், பழைய உறுப்பினர்களை சரிபார்ப்பதுமாகும்,” என்று கூறினார்.
அவர் மேலும்,“தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஆவணங்களின் படி, ஒவ்வொரு வார்டிலும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். அதேபோன்று, புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். நமது முகவர்கள் நேரில் சென்று, அரசு வழங்கும் சரிபார்ப்பு ஆவணங்களைக் கொண்டு, அங்கன்வாடி ஊழியர்களுடன் இணைந்து, முகவரி மற்றும் வாக்காளர் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை கவனமாகச் சரிபார்க்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது,
“ஒவ்வொரு குடும்பத்தினரையும் நாம் குறைந்தது மூன்று முறை நேரில் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த சந்திப்பின்போது, அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு தற்போது நிறுத்தி வைத்திருப்பதை விளக்கி, அவை மீண்டும் செயல்படுவதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக தேர்வு பெறுவது அவசியம் என்பதை மக்களிடம் வலியுறுத்த வேண்டும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், செந்தில்குமார், சோமசுந்தரம், செல்வகுமார், ராஜரத்தினம், பேரூர் கழகச் செயலாளர் ருத்ராவதி, பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், கொளத்துப்பாளையம் பேரூராட்சி செயலாளர் பைப் ரவி, மூலனூர் பேரூர் செயலாளர் வெற்றி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்டச் செயலாளர் பங்க் மகேஷ்குமார், முன்னாள் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் சத்தியபாமா, அதிமுக சாமுவேல் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.