பெரம்பலூர்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கல்வி, உடற்கல்வி, பொது அறிவு,கலை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, கலந்துரையாடினார்.

மாணவ,மாணவர்களுடைய உயர்ந்த லட்சியம், அவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் இந்நிகழ்ச்சியில், 50 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ,மாணவிகளிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ,மாணவிகள் நலனில் அக்கறைக் கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம், மிதிவண்டி வழங்கும் திட்டம்,

அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்ததன் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகியுள்ளது.குறிப்பாக நீட், ஜே.இ.இ, போன்ற தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர்கள் பிற்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்கு என்ன படிக்க வேண்டும் என்பது குறித்தும் வழிகாட்டப்படுகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டுமானால் இரண்டு வழிகளில் தேர்வெழுதலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வெழுதினால் பதவி உயர்வின் மூலமூம், மற்றும் யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் நேரடியாகவும், ஐ.ஏ.எஸ் பணியில் சேரலாம். எனவே மாணவ, மாணவிகள் படிப்பதை தவிர வேறு எதையும் யோசிக்காமல் நன்கு படித்து வெற்றி பெற வேண்டும்.


டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல உங்கள் இலட்சியங்களை குறித்து கனவு காணுங்கள். அந்த லட்சியத்தை அடைவதற்கு தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுங்கள். எந்த ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கிவருகிறது. இந்தத் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் உயர்கல்வி வரை நன்கு படித்து வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்.

மேலும், உங்கள் பகுதியில் யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார் இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) வெங்கடேசன் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *