இந்திய ஹாக்கி சர்வதேச ஹாக்கியுடன் இணைந்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக நேற்று இந்தியா முழுவதும் ஆயிரம் போட்டிகள் நடத்தி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்தக் கின்னஸ் சாதனையின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மைதானங்களில் 31 போட்டிகள் என 62 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் ஆயிரம் மாணவர்கள் தேசியக்கொடியுடன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் அஸ்வின் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயரத்தின ராஜ் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி ஹாக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார் ஹானஸ்ட் ராஜ் கலந்துகொண்டு வீரர்களுக்கு இந்திய ஹாக்கி நூற்றாண்டு சாதனைகளை விளக்கி கூறினார்கள்
ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா உடற்கல்வி ஆசிரியர்கள் ஆல்ட்ரின் அதிசயராஜ் சுரேந்திரன் ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்