தமிழக அரசு சார்பில், சட்டசபை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அருகே புதிதாக மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் இந்த மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மினி ஸ்டேடியம் அமைக்க உள்ள இடத்தினை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் முத்துமீனா இன்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித்துறை) ஐஸ்வர்யா, உடனிருந்தார்.இந்த ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, பல்வேறு விளையாட்டுகளுக்கான ஆடுகளங்கள், கழிவறை வசதிகள் என, விளையாட்டு வீரர்களுக்காக பல வசதிகளுடன் கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து லிங்கம்பட்டி ஊராட்சியில் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிகள், குலசேகரபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் பணி, அதே பகுதியில் MGSMT திட்டத்தில் நடைபெற்ற சாலை பணிகள் ஆகியவற்றையும் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் முத்துமீனா ஆய்வு மேற்கொண்டார்

அப்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித்துறை) ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் ராஜரத்தினம், உதவி இயக்குநர் (ஊராட்சி) சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *