கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான வாகன விற்பனை அனுபவம் கொண்ட ஆனைமலைஸ் குழுமங்களின் புதிய கிளையாக இந்த மையம் செயல்படுகிறது.
விழாவுக்கு ஆனைமலைஸ் குழுமங்களின் தலைவர் விக்னேஸ்வர் மற்றும் சித்தார்த் ஆகியோர் தலைமை தாங்கினர் ஐசர் நிறுவனத்தின் டீலர் டெவலப்மெண்ட் பொது மேலாளர் ராஜேஷ் குமரன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் சுஜன் சஹா, பங்கஜ் ஜெக்கா, அருண் சாத்தூர், ராதாகிருஷ்ணன், சர்மா, அரவிந்த், ஆனைமலைஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் ராஜன் ஆறுமுகம், தரணி குமார், நந்த குமார் பங்கேற்றனர்.
வாடிக்கையாளர்கள் அக்பர் அல்டாப், பஷீர் மற்றும் பல வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர் புதிய ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் ரிப்பன் வெட்டும் விழாவுடன் திறக்கப்பட்டது.
ஐசர் நிறுவனத்தின் புதிய ‘Pro X’ சிறிய EV டிரக் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது மின்னணு வணிகம் மற்றும் கூரியர் சேவைகள் போன்ற நவீன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் புதிய ஐசர் வாகனங்களை வாங்கிய டிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது “ஐசர் வாகனங்கள், கனரக வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளன. கோவையில் வணிக வாகன தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த புதிய மையம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும்,” என ஆனைமலைஸ் குழுமங்களின் தலைவர் விக்னேஸ்வர் தெரிவித்தார்..