புதுச்சேரி, கேந்திரிய வித்யாலயா-1, ஜிப்மர் வளாகத்தில், அகிரா மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் (Akira Miyawaki Forest Project) Chemfab Alkalis Limited CSR உதவியுடன் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் அன்னபிரதோக்ஷனா சேவை அறக்கட்டளையுடன் இணைந்து அடர்வன காடு உருவாக்கும் நோக்கோடு 300 வகையான பாரம்பரிய நாட்டு மரங்கள் நடும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

புவி வெப்பமயமாதலை குறைப்பதற்காகவும் குறிப்பாக நகர்ப்புறங்களில், சுற்றுச்சூழலை மேம்படுத்துவும், காற்று மாசுபாட்டை தடுக்கவும், தொடர்ந்து அடுத்த கட்டமாக அகிரா மியாவாக்கி காடுகள் அமைக்கும் பணி அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை தமிழ்நாடு &புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் பொது இடங்களில் செய்து வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களான ரவி குமார் சிட்டோரியா (Professor (SS),Dept. of Plastic Surgery, JIPMER) அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ராமபிரசாத் (Principal, Kendriya Vidyalaya, No.: 1, JIPMER Campus, Puducherry),இளங்கோ (Manager civil department) மற்றும் ராஜா (HR manager Chemfab Alkalis Ltd.) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறுங்காடுகள் உருவாக்கும் திட்டத்தின் தலைமை நிர்வாகியான பிரவின் குமார் (Green shadows project, Annapradokshana Charitable Trust) அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியை லஹாரி நாக் (CN, PGT Biology) அவர்கள் தொகுத்து வழங்கினார்.

மேலும் கேந்திரிய வித்யாலயாவின் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்று மகிழ்ச்சியாக மரங்களை நட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *