தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடை முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாக தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரியங்காவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது
இதனை அடுத்து மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் அண்ணா பேருந்து நிலையம் சென்றனர் அங்கு கடைக்கு முன்பாக 5 அடிக்கு மேல் கவுண்டர் அமைக்கப்பட்டு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி வாகனம் மூலம் பொருட்களை கவுண்டர்களை எடுத்துச் செல்லப்பட்டது
அப்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் கடைக்காரர்களிடம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அப்படி கடை எங்களுக்கு தேவையில்லை சுவர் கட்டப்பட்டு அதனை பயன்படுத்தி விடுவோம் என்று ஆக்கிரமிப்பு செய்த கடைக்காரர்களிடம் கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் காராராக பதிலளித்தார்
மேலும் பேருந்து நிலையத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் திருநெல்வேலி பேருந்து நிறுத்தம் இடத்திலும் திருச்செந்தூர் பேருந்து நிறுத்தப்படும் இடத்திலும் கடை முன்பு பல அடி தூரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கவுண்டர் அமைக்கப்பட்டு பொருட்கள் அமைக்கப்பட்டு இருந்தது அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் போது கடையில் இருந்த நபர் பொருட்கள் எதுவும் எடுக்கக் கூடாது என்று அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தார் நீங்கள் வாக்குவாதம் செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்தனர்
மாநகராட்சி ஆணையராக பிரியங்கா பதவி ஏற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்று தொடர்ந்த புகாரை பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஆக்கிரமிப்பு பொருட்கள் அனைத்தும் மாநகராட்சி வாகனம் மூலம் இயற்றப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டுள்ளது
ஆக்கிரமிப்பு செய்த கடைக்காரர்களிடம் இனி ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர் ஆக்கிரமிப்பு செய்த சில கடைக்காரர்கள் இடம் நீங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை செலுத்த வேண்டாம் உங்கள் கடையை காலி செய்து கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டது சில கடைக்காரர்கள் இடம் இதுபோல இனி தொடர்ந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது
இதே நிலவை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து அண்ணா பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு தொடராமல் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்