காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள கே டி எஸ் மணி மாளிகை, திமுக நகர கட்டிடத்தில், உலகப் புகழ்பெற்ற பாஸ்கின் ரோபிட்ஸ் மற்றும் பர்கர் மேன் நிறுவனங்களில் காஞ்சிபுரம் நகரக் கிளையானJRDபேக்கர்ஸ் திறப்பு விழா நவம்பர் 8, சனிக்கிழமை காலை 11 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக மாநகர செயலாளர் சி. கே. வி. தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி,குத்து விளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளர் ஏ. எஸ். முத்துச்செல்வன், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பி. பரணிதரன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.பி. பைனான்ஸ் பூபதி,எம். சீனிவாசன், கே.ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான காஞ்சி நகர முக்கிய பிரமுகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் JRD பேக்கர்ஸ்
பங்குதாரர்கள் பி.ராமன்,எஸ். தினேஷ் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *