திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வந்தே மாதரம் பாடல் 150ஆம் ஆண்டு விழா..
திருவாரூர் அரசு உதவி பெறும் வ. சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
இந்திய தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்திய கலாச்சார அமைச்சகம் கூறிய வண்ணம் கடலூரை மையமாக கொண்ட ஐந்தாம் எண் தமிழ்நாடு கப்பற்படை பிரிவு கமாண்டர் செந்தூர்சன் வழிகாட்டுதல் படி இந்திய விடுதலை போராட்டத்தில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தேசபக்தியை ஊட்டியதுடன் உணர்ச்சி மிக்க பாடலாகவும், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதாகவும் விளங்கிய வந்தே மாதரம் பாடலைப் பாடி நம் இந்தியத் தாய்த்திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும். நிகழ்வானது திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவு மாணவர்கள் சார்பில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளிச் செயலர் முனைவர் எம்.வி. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர் தியாகராஜன் தலைமை தலைமையில் என்.சி.சி. மாணவர்கள் அனைவரும் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.
நிகழ்வில் என்.சி.சி. முதன்மை அதிகாரி ஆர். சதீஷ்குமார் உதவித் தலைமை ஆசிரியர் எஸ். முருகேசன் வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் ஆசிரிய அலுவலர்கள் பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.