தஞ்சாவூர் மாவட்டம்-:கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் பலவேறு மருத்துவ .முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த மாதத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் ஹோட்டல் டைமண்ட் மினி மஹாலில் நடந்தது.
முகாமில் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் முகவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.l.டாக்டர் விக்னேஷ் பிரகாசம் தலைமையில் 70க்கும் மேற்பட்ட முகவர்கள் பல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பல் பராமரிப்பு பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. . நிறைவில் கும்பகோணம் மாவட்டத் தலைவர் நவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.