திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழே அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ, ஆர்.காமராஜ், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை அதிமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல்வேறு கண் சார்ந்த நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட னர்.
முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த முகாமில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கள் (மேற்கு) குமாரமங்கலம் கே.சங்கர், (கிழக்கு) யூ.இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.ஜி.பாலா, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.மூர்த்தி, தொழவூர் முனுசாமி, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆலங்குடி வி. துரைராஜ், கிழக்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் லாயம் சிவசங்கர வேலன், நகர அவைத் தலைவர் ரத்னகுமார், நகர பொருளாளர் எஸ். அருள்முருகன், நகர இணைச் செயலாளர் பட்டம் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விடையல் சங்கர்,மாத்தூர் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் குருமூர்த்தி, நகர தலைவர் வி.எஸ். வடிவேல் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வருகின்ற 31- ந்தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளில் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.