இந்தியாவை சேர்ந்த 500 தாய் மகள்கள் ஜோடியாக மேடையில் பிங்க் வண்ண ஆடை அணிந்து ரேம்ப் வாக் மற்றும் நடனம் ஆடி கவனம் ஈர்ப்பு
வளைகுடா நாடான அபுதாபியில் இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய மகளிர் மன்றம் சார்பாக நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வில் பிங்க் வண்ண ஆடைகள் அணிந்து 2000 பெண்கள் பங்கேற்ற நிகழ்வு ஐன்ஸ்டீன் உலக சாதனையில் இடம் பிடித்து அசத்தியுள்ளது..
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வளைகுடா நாடான அபுதாபியில் உள்ள இந்தியா சமூக மற்றும் கலாச்சார மையத்தில் யுனைடெட் இன் பிங்க் எனும் தலைப்பில் நடைபெற்றது..
அபுதாபி இந்தியா சமூக மற்றும் கலாச்சார மையத்தின் மகளிர் மன்றம், கண்ணன் ரவி குழுமங்கள் இணைந்து நடத்திய இதில், 500 தாய்–மகள் ஜோடிகள் உட்பட 2000 பெண்கள் பிங்க் நிற உடையணிந்து பங்கேற்றனர்..
அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குதல் எனும் நோக்கத்துடன்,
நடைபெற்ற இதில் கலந்து கொண்ட தாய் மகள்கள் ஜோடி மேடையில் தன்னம்பிக்கையை வலியுறுத்தும் விதமாக ரேம்ப் வாக் மற்றும் நடனம் ஆடி அசத்தினர்..
பெண்களின் ஒற்றுமை, சமூகப் பொறுப்பு மற்றும் ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரே இடத்தில் பிங்க் வண்ண ஆடை அணிந்து 2000 பெண்கள் கலந்து இந்நிகழ்வு ஐன்ஸ்டீன் உலக சாதனை (Einstein World Record) புத்தகத்தில் இடம் பிடித்தது..
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனப்பூர்வமான துணையாக இருப்போம் எனும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா சமூக மற்றும் கலாச்சார மையத்தின் பெண் அதிகாரிகள், பெண் தொழில்முனைவோர், பெண் காவலர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள் என பெண்கள் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது..