தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மூலனூரில் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதனும் கயல்விழியும் தொடங்கி வைத்தனர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.3 கோடி 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளும், புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகளும், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர். மு.பெ. சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமையில், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இ.ல. பத்மநாபன், மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் திமுக பேரூராட்சி செயலாளர் மக்கள் தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி செயலாளர் சுரேஷ் ரேவதி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் கார்த்தி, மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், மூலனூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்லமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்ட மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட முக்கிய பணிகள் வருமாறு:
மாலமேட்டில் வேளாம்பூண்டி விநியோகக் கடை கட்டிடம் – மதிப்பீடு ரூ.9.97 லட்சம்.
கோட்டை மருதூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் – ரூ.30 லட்சம்.
ஒன்றிய பொது நிதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் – ரூ.10 லட்சம்.
குருனைக்கல்பட்டியில் அங்கன்வாடி மையக் கட்டிடம் – ரூ.14 லட்சம்.
மூலனூரில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் (பணி துவக்கம்) – ரூ.2.50 கோடி.
தூரம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் – ரூ.30 லட்சம்.
இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாக துணை முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தை, தாமே முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் உருவான நாளிலிருந்து, கடந்த 55 மாதங்களாக, மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று திறந்து வைக்கப்படும் பணிகளும், அந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாகும்,” என தெரிவித்தார்.
இதற்குமுன், குருனைக்கல்பட்டியில் பள்ளி சமையலறை கட்டிடம் திறந்து வைத்தபோது, பொதுமக்கள் அமைச்சர்களிடம் மனு அளித்து, “அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து சேவை இல்லை. பள்ளி நேரத்திற்கு ஏற்றாற்போல் பேருந்து இயக்கம் செய்யப்பட்டால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்,” எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல, சின்ன மருதூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதிகளில் தார் சாலை வசதி இல்லை எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அமைச்சர் சாமிநாதன் அவர்கள், அந்தப் பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
மூலனூரிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்ற இந்த திட்டப் பணிகள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய பங்காற்றுவதாக அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, வளர்ச்சி நெறியில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, கல்வி, சாலை, அலுவலக கட்டிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கி வருகிறோம். எதிர்வரும் மாதங்களில் மேலும் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்,” என கூறினார்.