கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த அக்டோபர்மாதம் மிக சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் கதிரவன், அம்பேத்கர், பாரதி, செந்தில்குமார், உதயகுமார், சிவபிரகாசம், பாஸ்கர், நந்தகுமார், ரவிச்சந்திரன், சந்திரன், கவிதா, உதவி ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், கவியரசன்,பிரசன்னா, பாலமுருகன், சுரேஷ்முருகன், செந்தில்குமார், சக்திவேல், திவாஷ், செல்வகுமார், பரந்தாமன்,நடராஜன், மணிகண்டன், செல்வபாண்டியன், பிரேம்குமார், தவச்செல்வம், சிவராமன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 106 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *