அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் ஒன்றியம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா நடந்தது விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார் அறிவியல் மன்றம் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக துணை ஆய்வாளர் பழனிசாமி பரிசுகளை வழங்கி உலக அளவில் அறிவியல் எவ்வாறு சமூகத்திற்கும் அமைதிக்கும் உதவுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார்
அறிவியல் மன்ற பொறுப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார் ஆசிரியை தனலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அந்தோணி டேவிட் அபிராமி ஆய்வக உதவியாளர் மணிகண்டன் பயிற்சி ஆசிரியர்கள் கார்த்திகா காஞ்சனா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்