தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், நவ- 13.
சார்பில் ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு பாராட்டு விழாவில் இந்திய கபடி அணி முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டனர்.
ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்றவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அபினேஷ். இவருக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் முரசொலி ஏற்பாட்டின் பேரில் பாராட்டு விழா நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில்
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வரவேற்புரையாற்றினார்.
தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம், சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் கபடி வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான காசி.பாஸ்கரன், இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய புரோ கபடி லீக் பயிற்சியாளருமான தர்மராஜ்.சேரலாதன் ஆகியோர் கலந்து கொண்டு கபடி வீரர் அபினேஷை பாராட்டி பேசி நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் அபினேசுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக கபடி வீரர் அபினேஷ், தஞ்சை மணிமண்டபம் பகுதியில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். விழாவில் தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், தஞ்சை மாவட்ட கல்வி அதிகாரி மாதவன், ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, காவல் ஆய்வாளர் சுதா மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர்கலந்து கொண்டனர்.