வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் அருகே தண்ணீர் டிராக்டரை திருடி சென்ற வட மாநில இளைஞரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னாகரம் பகுதியில் கேசவன் என்பவர் தனது தண்ணீர் டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில்தண்ணீர் டிராக்டரை பீகாரைச் சேர்ந்த வட மாநில இளைஞர் அமலேஷ்யாதவ் திருடிசென்றார்.
இதையடுத்துபொதுமக்கள் துரத்தி சென்று சிறுமலை அடிவாரம் பகுதியில் பிடித்து வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.