குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் முன்பு குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு போராட்டம் நடந்தது.
நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் 30 ஆண்டுகள் மேல் வசிக்கும் தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்து தரவும் மற்றும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யவும்
சிமெண்ட் சாலை,கால்வாய், மின்சாரம்,தண்ணீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகனிடம் மனு அளித்தனர்.
இதில் மாநில துணை செயலாளர் பொறியாளர் பாஸ்கர், ஒன்றிய பொருளாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர்கள் சிறுத்தை சேகர், ஜானகிராமன், அருண் பிரசாத், இசிபா , நகர அமைப்பாளர் அருண், மாவட்ட துணை அமைப்பாளர்
ஜெய பிரகாஷ், கவியரசன், பிரகாஷ் அருணகிரி, மூர்த்தி, இராமகிருஷ்ணன், காளி, அஜய் வளவன், அம்பேத் வளவன், விக்னேஷ், கோபி, வீரமணி,
சரவணன், ரஞ்சித், சிவமூர்த்தி, ஜீவா,புகழ் மணி, புருஷோத்தமன் ஷகி,ரகுவரன், மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.