உலக நீரழிவு தினம் மற்றும் தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் மாதம் 14 ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கோவை சங்கரா கண் மருத்துவமனை பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் , திருத்துறைப்பூண்டி டெல்டா இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு நீரழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதனை எவ்வாறு எதிர்கொள்வதும் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை உள்ளிட்ட தகவலகளை பொது மக்களுக்கு விளக்கிடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்திய படி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.