திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா முன்னாள் மாணவரும் , ஓய்வுபெற்ற ஆசிரியருமான செல்வ கணபதி தலைமையில் நடைபெற்றது. ரத்தினம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தேன்மொழி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இசை ஆசிரியை பானுமதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் பள்ளி மாணவச்ஷசெல்வங்கள் நேரு பற்றிய பாடல், கவிதை, கதை பேச்சு, கட்டுரை ஓவியம் போன்றவற்றில் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தினர். நிறைவில் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர் ரத்தினம் பாக்சுடன் எழுதுபொருட்களை வழங்கினார்.
ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திக், செல்வ கணபதி ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உதவும் கரங்கள் ஆதிகேசவன் சார்பில் பொம்மையுடன் கூடிய சீரக மிட்டாய் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பானுமதி புத்தகம் வழங்க,
ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.