மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கல்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான அரசு உதவி பெறும் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 11ம் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் 232 மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் , முதன்மை கல்வி அலுவலர் , பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சென்ற இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர்கள் நல்ல தேர்ச்சியை கொடுத்துவிடுவீர்கள் இந்தாண்டு முதல் 5 இடங்களில் தேர்ச்சியில் திருவாரூர் மாவட்டம் இடம்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.