தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கருவேலம்பட்டி கீழ் ஊர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த பகுதியில் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தில் ஊர் பெரியவர்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
இதில் பாமகவை சேர்ந்த சரவணன் என்பவர் ஊர் தலைவராக இருக்கும் நிலையில் வரவு செலவு குறித்து காளியப்பன் கணக்கு கேட்டுள்ளார். இந்த நிலையில் சரவணனுக்கும் காளியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக சரவணன் ஆடியாட்களை வைத்து காளியப்பன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அச்சமடைந்து குடும்பத்துடன் வீட்டிலே பதுங்கியுள்ளனர். இந்த நிலையில் தாக்க வந்த அடியாட்கள் கஞ்சா, மதுபோதையில் வீட்டியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் முழுவதுமாக அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
பாமகவை சேர்ந்த சரவணன் அடியாட்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து அச்சுறுத்து வருவதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காளியப்பன் புகார் அளித்துள்ளார்.