திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 136- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார், வலங்கைமான் வட்டார சேவாதள தலைவர் கே. என். ஆர். இளங்கோவன் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஜவஹர்லால் நேருவின் சிறப்புகளை பற்றி விரிவாக பேசினார்.
நிகழ்வில் வலங்கைமான் பேரூர் 6- வது வார்டு திமுக பொருளாளர் கோ.சண்முகசுந்தரம் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.