வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
சிறுமலையில் கேளை ஆடு வேட்டையாடிய 3 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள், கேளை ஆடு இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் சிறுமலை வனச்சரகர் பாஸ்கர் தலைமையில் வனத்துறையினர் சாணார்பட்டியை அடுத்த தவசிமடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,
சிறுமலை வனப்பகுதியில் கேளை ஆடு வேட்டையாடிய தவசிமடையை சேர்ந்த பெருமாள்(38), செங்குறிச்சியை சேர்ந்த ஆண்டிச்சாமி(39), கார்த்திக்(23) ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 ஒற்றைக்குழல் நாட்டுத்துப்பாக்கிகள், சமைப்பதற்காக வைத்திருந்த கேளை ஆடு இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.