ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றத்திறனாளியை ஓசியில் ஊசி போட வந்ததாக ஒருமையில் பேசியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மற்றும் அருகாமையில் உள்ள மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களில் கிராமங்களில் இருந்தும் புற நோயாளிகள் உள்நோயாளிகள் உள்ளிட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகானந்தம் என்பவர் காலை கால் வீக்கம் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக வெளி நோயாளியாக சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அப்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்பு ஊசி போடுவதற்காக முருகானந்தம் சிறிது தூரம் செல்லவேண்டி இருந்ததால் தனக்கு வீல்சேர் வழங்கும்படி கேட்டுள்ளார் அதற்கு தற்போது வீல் சேர் இல்லை என்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் மருத்துவ உதவி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து அவர் ஊசி போடும் இடத்திற்கு சுவற்றை பிடித்தபடி ஊசி போடுவதற்காக வந்த முருகானந்தம் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த ஆண் செவிலியர் அருள்முருகன் என்பவர் ஓசியில் தானே ஊசி போட வந்தாய் என புலம்பமால் தரக்குறைவாக முருகானந்தனை திட்டி உள்ளார்இதனையடுத்து மனம் வருந்திய மாற்றுத்திறனாளி முருகானந்தம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அங்கு சென்றபோது அருள் முருகன் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியதுடன் செய்தியாளரின் செல்போனையும் பறித்தார் இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் இது குறித்து அருள்முருகனிடம் கேட்டபோது அவர் காவல்துறையாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *