தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் அண்ணா திமுக சார்பாக நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் திறந்து வைத்தார் தமிழக எதிர் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைபுரத்தில் அண்ணா திமுக சார்பாக நீர் மோர் பந்தலை தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் திறந்து வைத்து  கொளுத்தி வரும் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க  இளநீர் பழச்சாறு பழங்கள் நீர்மோர் நுங்கு தண்ணீர் பழம் உள்ளிட்டவர்களை வழங்கினார் .

இதுகுறித்து மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் கூறும்போது அண்ணா திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனே குறிக்கோளாக செயல்படும் ஒரே இயக்கம் இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் அண்ணா திமுக தான் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பண்ணைப்புரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத் குமார் அண்ணா திமுக நிர்வாகி பாஸ்கரன் உள்பட பேரூர் அண்ணா திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *