ஊத்துக்கோட்டை அருகே செல்போன் தவணை கட்டணம் கட்டுவதற்காக பெண்ணை அடித்து கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி பகுதியைச் சேர்ந்தவர்
சரஸ்வதி (55) கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும்இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்

இந்நிலையில் நேற்றைய தினம் சரஸ்வதி தான் குடியிருக்கும் மேல் மாடியில் வாடகை விடப்பட்டு இருப்பதால் அந்த இடத்தில் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார்,உறவினர்கள் சென்று வீட்டில் பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் ஊத்துக்கோட்டை போலீசார் அவர் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சரஸ்வதி அணிந்திருந்த செயின் கம்பல் செல்போன் திருடு போனதை கண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் கடைசியாக சரஸ்வதி செல்போனில் இரண்டு புதிய நம்பருக்கு பேசி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அத்தகைய நம்பர்களை ஆராய்ந்ததில்

அந்த போன் சிக்னல் சென்னை அரும்பாக்கம் பகுதியில் காட்டியுள்ளது
அப்பகுதியில் ஆட்டோவில் படுத்திருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைப்பு வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர் தனது செல்போன் உடைந்ததால் மாத தவணை கட்டுவதற்கு வழி இல்லாமல் இருப்பதாலும் தன் காதலிக்கு செல்போன் பேசுவதற்கு இல்லாததால் அத்தகைய நகைகளை கொள்ளை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்

அவர் அடகு வைத்த கம்பளையும் போலீசார் மீட்டு ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் புதிய செல்போன் வாங்குவதற்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அடித்து கொலை செய்து அவர் நகையை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை போலீசார் 8 மணி நேரத்திற்குள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *