மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பார்வையிட்டு காவலர்களுக்கு அகம் திட்டம் தொடர்பான சிறப்புகளை எடுத்துரைத்தும் , அறிவுரைகள் வழங்கியும் , காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததோடு விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) உடனிருந்தார்.
மேலும் இன்றைய கவாத்து பயிற்சி யின் போது, தமிழக ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பெற்றுவரும் மூன்றாம் பாலினத் தவர்களை ஊக்கு விக்கும் விதமாக அவர்களிடையே காவல் ஆணையர் லோகநாதன் எழுச்சியுரை ஆற்றினார்.