எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் புதுச்சேரி சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஆணைக்காரன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வடரங்கம் கிராமத்திற்கு சென்று அங்கு லதா என்பவரின் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது, அவர் வீட்டில் வைத்து புதுச்சேரி சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த 294 புதுச்சேரி சாராயத்தை போலீசார் கைப்பற்றி லதாவை கைது செய்தனர். இந்த சாராய பாட்டில்களின் மதிப்பு ரூ 20,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.