புதுச்சேரி அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் தாளாளர் இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நவம்பர் 14, 2025 அன்று, உலக தொழில் முனைவோர் வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் [EDII] கல்லூரி வளாகத்தில் தொழில் முனைவோர் பயிற்சி பணிமனை சிறப்பாக ஏற்பாடு செய்தது.

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் சமித்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றி இப்பயிர்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் Dr. S. பிரதீப் தேவநேயன் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று வாழ்த்துரையாற்றினார். மேலும் தொழில்முனைவு மேம்பாட்டை கல்வி அமைப்புடன் இணைந்து மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தலைமைத்துவதிறன்களை வளர்க்க கல்லூரி மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகளைப் பற்றி முதல்வர் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பொறியியல் கல்லூரி ( Atal Incubation ) மையத்தின் தலைமை செயல் இயக்க அதிகாரி திரு .விஷ்ணுவர்தன் அவர்கள் கலந்துகொண்டு, பல்வேறு தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சியில் தொழில்காப்பு மையங்கள் ( Incubation Centre ) வகிக்கும் பங்கு மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் குறித்து ஆழமான கருத்துக்களை பகிர்ந்தார்.
மேலும் தொழில்நுட்ப அமர்வில் My Core Life இணை நிறுவனர் திரு. சப்தகிரிசன் அவர்கள், தொழில் முனைவின் நடைமுறை அம்சங்கள், வளங்களின் பயன்முறை மேலாண்மை மற்றும் தொடக்க நிறுவனங்களை திறம்பட விரிவுபடுத்தும் உத்திகள் குறித்து மாணவர்களுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்தார். அதனை தொடர்ந்து,. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை தலைவர் Dr. B. மகிமை ராஜ் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் புதுமைவளர்ச்சி, தொடக்க நிறுவன கலாச்சாரம் மற்றும் தொழில் உருவாக்கத்தில் நிறுவனம் மேற்கொண்டு வரும் தேசிய அளவிலான பணிகளை வெளிப்படுத்தியது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமானது,
மாணவர்களிடையே தொழில் முனைவு திறன்களை மேம்படுத்துவது, புதுமை மிக்க சிந்தனையை ஊக்குவிப்பது மற்றும் படைப்பாற்றல் பிரச்சினைக்குத் தீர்வு வளர்த்தல் ஆகியவையாகும். EDII மூத்த திட்ட அலுவலர் திரு .விக்னேஷ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் திட்ட அலுவலர் கோகுலநாதன் நன்றி கூறினார்.
மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தொழில் முனைவோர் நிகழ்ச்சி மாணவர்களுக்கு தொழில் நிபுணர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி, மாறிவரும் தொழில் முனைவு சூழலைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கிய ஒரு ஊக்கமளிக்கும் தளமாக அமைந்தது.