தூத்துக்குடி

தமிழக முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக சார்பில் ஒவ்வொரு பாவத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாகம் முகவர்கள் , இந்த பணிகளுக்காக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகளுடன் ஒன்று சேர்ந்து கண்காணித்து பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று 16.11.2025 அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி கே. பழனிச்சாமி உத்தரவுபடி, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை ரோடு செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் கணக்கிட்டு பணிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளிடமும் முறையாக இந்த பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உரிய வாக்கு அளிக்க தகுதி உடையவர்களை இணைக்க வேண்டும் எனவும், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் மட்டும் இறந்தவர்களை கண்டறிந்து முறையாக இப்பணிகளை செய்ய வேண்டும் எனவும் இந்த பணிகளுக்காக அதிமுக சார்பில் அந்தந்த பாகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கழகத்தை சார்ந்த பாக முகவர்கள் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றார்.

அப்போது உடன் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் மேற்குப் பகுதி கழக செயலாளர் ஏ. முருகன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மேற்குப் பகுதி கழக துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *