கும்பகோணம்: .குடந்தை காவேரி லயன்ஸ் சங்கம், மைசூர் காபி கம்பெனி மற்றும் நாமக்கல் எம் எம் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம். மேலக்காவேரி காமராஜர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு குடந்தை காவேரி லயன்ஸ் சங்க தலைவர் சக்கரபாணி,மைசூர் காபி கம்பெனி நிறுவனர் சுகுமார் ஆகியோர் , தலைமை வகித்து துவக்கி வைத்தார்கள். மண்டல தலைவர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் வினோத் ராஜ் , மக்கள் தொடர்பு அலுவலர் விஜயராகவன் ஆகியோர் மருத்துவ முகாம் நோக்கம் குறித்து பேசினார்கள். நாமக்கல் எம் எம் மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள் ரகு ,சாய் குமார் ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கி மாத்திரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர்கள், .பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் அரிமா நண்பர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார். இந்த மருத்துவ முகாம் சேவையை லயன் சங்க உறுப்பினர் பாலு. செய்திருந்தார். இதில் மாவட்ட வள்ளலார் தினம் ரவி கலந்து கொண்டார்.
.
இம்முகாமில் 125 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் மருத்துவ முகாம் சேவைகளை சங்க உறுப்பினர் பாலு. செய்திருந்தார்.