திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள 29 வாக்களிக்கும் மையங்களுக்கு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து அனைத்து வாக்களிக்கும் மையங்களுக்கு சென்று SIR எனப்படும் வாக்காளர்கள் படிவத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்..
தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள வாக்களிக்கும் மையங்களில் வாக்காளர்களின் பெயர் பட்டியல்கள் சரியாக உள்ளதா? விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் இணைப்பதற்கு படிவம் வழங்கப்படுகின்றதா? முறையாக அனைத்து வாக்காளர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றதா? உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்..
தொடர்ந்து இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகளான அப்பாஸ் அலி ரகுபதி, கிருஷ்ணன், கலீல் ரகுமான் மோகன், தங்கவேல், தாமோதரன், கற்பகராஜ்,
குமார்தேவராஜ், விஜயகுமார், கதிர்வேல், ஷாஜகான், சபாபதி, திருமலைசாமி, காமராஜ், முருகன், கணபதி, மாரிமுத்து, சுப்பிரமணி, கணேசன், பால்ராஜ், அங்குசாமி, சபீக், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் விண்ணப்ப படிவங்கள் அனைவருக்கும் பாக முகவர்கள் சார்பாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்…