*மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பார்வையிட்டனர்..
கோவையில் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சி கடந்த நவம்பர் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் உடல் நலம் காக்கும் மருத்துவ முகாம்,இரத்த தான முகாம்,கல்வி விழிப்புணர்வு முகாம்,புத்தக அரங்கம்,மது போன்ற போதை பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனஐ முகாம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன..
இந்நிலையில் கண்காட்சியை பார்வையிட வந்த தமிழக சிறுபான்மை துறை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோருக்கு ஜமாத் நிர்வாகிகள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
தொடர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு போதை பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனை வழங்கும் முகாமை தமிழக சிறுபான்மை துறை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ,ஐ.என்.டி.யூ.சி.நிர்வாகி புவனேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர்..
விழாவில் பேசிய சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,எல்லா மதங்களும் அமைதியை வலியுறுத்துவதாக கூறிய அவர்,ஆனால் ஒரு சில ஆதாயங்களுக்காக பிரிவினைகள் ஏற்படுத்தப்படுவதாக கூறினார் ஆனால் இது போன்ற மத நல்லிணக்க நிகழ்வுகள் சகோதரத்துவம்,சமத்துவம் ,ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் , தலைவர் அஹ்மத் பாஷா,செயலாளர் அக்சன் ஜமீல்,பொருளாளர் வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயி்ல்,துணைத்தலைவர்.அஸ்மத்துல்லாஹ்,துணை செயலாளர் முஹம்மத் ஜூனைத் மற்றும் நிர்வாக உஉறுப்பினர்கள அமீர் அம்சா, அப்துல் குத்தூஸ், நூருல் அமீன்,காதர் அலி கான், மார்க்க அறிஞர்.சதகத்துல்லாஹ் உமர், ஹக்கீம், ஜூல்பிகர் அலி, சிராஜ்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..