பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆசிரியர் தகுதித்தேர்விற்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் 16 மையங்களும், வேப்பூர் ஒன்றியத்தில் 02 மையங்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 02 மையங்கள் என மொத்தம் 21 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இத்தேர்வின் இரண்டாம் தாளினை எழுத மொத்தம் 5,822 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர் அதில் 5,245 நபர்கள் தேர்வெழுதினர், 577 நபர்கள் வருகை தரவில்லை.
இத்தேர்வுப் பணியில் முதன்மைக் கல்வி அலுவலருடன் இணைந்து மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் வட்டார ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் பறக்கும்படை பணியில் ஈடுபட்டனர்.
தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு மையத்திலும் உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள் பாதுகாப்பு மறீறும் மருத்துவ உதவிக்கான பணிகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன்
உடனிருந்தார்.