ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பூத்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர் இளையராஜா ஆலோசனை
தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 தோ்தலையொட்டி நடைபெற்று வருகின்றது.
அதன்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வடக்கு ஓன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகள் உள்ளடக்கிய 38 பூத்களுக்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்காக எஸ்ஐஆர் கள ஆய்வுக்கான கணக்கீட்டு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதை மேலும் சிறப்பாக செய்திடும் வகையில் ஓன்றிய அலுவலகத்தில் ஆலோசனை ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா தலைமையில் நடைபெற்றது பின்னா் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்மீன்வளம்மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள 38 பூத்களிலும் உள்ள வாக்காளா்கள் விடுபட்டு விடக்கூடாது அதில் கண்ணும் கருத்துமாக அப்பகுதிக்குட்பட்ட நிா்வாகிகள் பணியை செய்து வருகின்றனா் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்று முதலமைச்சர் தளபதியாா்யிட்ட கட்டளையை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் வழியில் நிறைவேற்றி காட்டுவதுதான் எங்களது பொறுப்பு என்ற கடமை உணா்வோடு அனைத்து நிா்வாகிகளோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். என்று கூறினாா்.