என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கப்பட்டது
நெய்வேலி புதுநகரில்,”என்எல்சி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலச்சங்கத்தின் சார்பில் குடும்ப சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சி 19-வது வட்ட சங்க வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு சங்கத்தின் தலைவர் வீரா.பாலு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மணிசேகரன் வரவேற்புரை ஆற்றினார். அலுவலக செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு முதன்மை அழைப்பாளராக என்.எல்.சி மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கலந்துகொண்டு பேசும்போது, சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்சார்ந்த இதுபோன்ற பணிகளை பாராட்டுகிறேன். மேலும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு என்எல்சி நிர்வாகம் எப்போதும் உறுதுணையாகவும் இருக்கும் என பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக என்எல்சி சுரங்க துறை செயல் இயக்குனர் ஜஸ்ஃபார் ரோஸ், முதலாவது சுரங்க விரிவாக்க முதன்மை அதிகாரி பொது மேலாளர் சுரேஷ்மூர்த்தி, என்எல்சி நகர நிர்வாக பொது மேலாளர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரையும் என்எல்சி மனிதவளத்துறை அதிகாரியும், சங்கத்தின் இணைப்பு அதிகரியுமான பொதுமேலாளர் ஒ.எஸ்.அறிவு வரவேற்று கௌரவித்தார்.
விழாவில் என்எல்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து சங்கத்தில் உறுப்பினராக இருந்து உயிர்நீத்த உறுப்பினர்களின் குடும்ப வாரிசுகள் 45 பேருக்கு குடும்ப சேமநல நிதியாக ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சி துவக்கத்தின் போது அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் மலர் மாலை அணிவித்து புகழாரம் சூட்டினார். தொடர்ந்து உயிர் நீத்த சங்க உறுப்பினர்களுக்கும், என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி அவர்களின் தாயார் சீதா மகாலட்சுமி மறைவிற்கும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் அனைத்து பகுதி துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.